ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்: 154 பொது (பல்வகை)த் துறை நாள் : 03.09.2020-ன் படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 2025 ஜன.13ம் தேதிஅன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜன.25ம் தேதி அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 25ம் தேதி வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 13.01.2025 திங்கள்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
The post ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.