- அலகாபாத்
- சேகர் குமார்
- தில்லி
- தேசிய மாநாட்டுக் கட்சி
- பாராளுமன்ற
- விஷ்வா இந்து புனிதர்
- கோவில்
- அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகம்
- சேகர் குமார்
டெல்லி: வகுப்பு வாதத்தை தூண்டும் வகையில் பேசிய நீதிபதிக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 8ம் தேதி விஷ்வ இந்து பரிசுத்த பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், பொது சிவில் சட்டத்தின் அவசியம் என்ற தலைப்பில் வகுப்பு வாதத்தை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற மூத்த வழக்கறிஞர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் சிறுபான்மையினருக்கான எதிராக பேசிய நீதிபதி சேகர் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவம் பற்றி விரிவான விளக்கமளிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு இருப்பதாக உச்சநீதிமன்றமும் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசிய நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவர போவதாக தேசிய மாநாட்டு கட்சியின் ஸ்ரீநகர் தொகுதியின் எம்.பி. ருஹீல்லா மெஹ்தி தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளன நீதிபதி சேகர் குமார் யாதவ், ஏற்கனவே பசு வதை தொடர்பான வழக்கில், பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என கூறியவர், மற்றொரு வழக்கில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இந்திய பாரம்பரிய அங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சைகளுக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசிய அலகாபாத் நீதிபதி: சேகர் குமாருக்கு எதிராக விரைவில் பதவி நீக்கத் தீர்மானம் appeared first on Dinakaran.