×

பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கியது முதல், தொழிலதிபர் கவுதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் போராட்டம், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. மேற்கண்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதம் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,PM Modi ,Delhi ,Modi ,Parliament ,US Department of Justice ,Gautam Adani ,Manipur ,Uttar Pradesh ,
× RELATED மீண்டும் மீண்டும் துரோகம் இழைப்பதால்...