பாரத சாரண சாரணியர் இயக்ககத்தின் தேசிய அளவிலான வைரவிழா, கலைஞர் நூற்றாண்டு நினைவுவிழா நடத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வி துறையின் மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏனையவற்றுடன் வரிசை எண்.2-இல் கீழ்கண்ட அறிவிப்பினை வெளிவிட்டுள்ளார்.

“பாரத சாரண சாரணிய இயக்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டம் 2000 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்வாண்டு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா ஆண்டாகும். இதனையொட்டி தேசிய அளவிளான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைரவிழா ஜாம்போரி (Diamond Jubilee National Jamboree) ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.”

2. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், சாரண சாரணிய இயக்கம் 1909ம் ஆண்டில் இந்தியாவில் துவக்கப்பட்டது என்றும் சாரண, சாரணியர்களின் பல்வேறு செயல்திட்டங்களை வெளிக்கொண்டு வரும் பொருட்டு மாவட்ட அளவில் பேரணிகளும், மாநில அளவில் கேம்புரிகளும், தேசிய அளவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாம்புரிகளும் நடத்தப்படுகின்றன என்றும் இதில் பல்வேறு மாநில கலாசாரங்களும், நட்புறவும் பகிர்ந்து கலாசாரங்களை என்றும், கொள்ளப்படுகின்றன. என்றும் கலாச்சாரங்களை வலியுறுத்தும் ஊர்வலங்களும், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் செயல்பாடுகள் இதில் இடம்பெறுகின்றன என்றும், சாரணர் இயக்கம் குருளையர், சாரணர், திரிசாரணர் என மூன்று பிரிவுகளாக உள்ளது என்றும் சாரண மாணவர்களை பயிற்றுவிப்பவர்கள் ‘ஸ்கவுட் மாஸ்டர்கள் எனப்படுகிறார்கள் என்றும், தற்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர் சாரணர் இயக்கத்தில் உள்ளனர் என்றும் சாரணர் முகாம்களில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும் என்றும் எளிய உடற்பயிற்சிகள், முதலுதவி, இன்னும் பல்வேறு பயனுள்ள பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றும் சிறுவயதில், மாணவப்பருவத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் தன்னம்பிக்கையும், நற்பண்பும் மிக்கவர்களாக வளர்வதுடன். மற்றவர்களை சகோதரர்களாக மதிக்கும் மாண்புடையவர்களாக உயர்கிறார்கள் என்றும், இயற்கை மற்றும் உயிரினங்களின் மீது நேசம் கொண்டவர்களாகவும், நாட்டுப் பற்றுமிக்கவர்களாகவும் இவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்றும். எண்ணம், செயல், வாக்கு ஆகியவற்றில் தூய்மை கொண்டவர்களாகவும் இளைய தலைமுறையினரை சாரணர் இயக்கம் மாற்றுகிறது என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

3. மேலும், “பாரத சாரண சாரணியர் இயக்க, தேசியத் தலைமையகம் “BSG வைர விழா பெருந்திரளணி” (Diamond Jubilee National Jamboree) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அப்பெருந்திரளணியினை தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் தொகுத்து வழங்கிட தேசிய தலைமையகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது என்றும், தேசிய தலைமையகமே அப்பெருந்திரளணியின் எண்ணிக்கை ஒதுக்கீடு மற்றும் முகாமில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், அட்டவணை ஆகியவற்றை தேசிய தலைமையக பொறுப்பாளர்கள் மற்றும் குழுக் கொண்டு திட்டமிடும் என்றும் அப்பெருந்திரளணி ஏழு நாட்கள் நடைபெற உள்ளதால், தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 25,000 சாரண, சாரணியர்கள், திரிசாரண, திரி சாரணியர்கள், சாரண சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்பெருந்திரளணி செயல்பாடுகளை மாநிலத் தலைமையகம், பாரத சாரண சாரணியர், தமிழ்நாடு அக்டோபர் முதல் ஜனவரி வரை உள்ள காலத்தில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் சிறப்பாக நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.” என்றும், பாரத சாரண சாரணியர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு வைரவிழா தேசிய திரளணியாகவும், (Diamond Jubilee National Jamboree), முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழா நடைபெறவுள்ளது என்றும், இவ்விழாவில் தினசரி நிகழ்வுகளாகவும், போட்டிகளாகவும், முகாம் கலை, மாநில நுழைவாயில், சாரண சாரணிய திறன்கள். ஆக்கக்கலைத் திட்டம், ரங்கோலி, அணிவகுப்பு, இசைக்குழு அணிவகுப்பு. வண்ணமிகு அணிவகுப்பு. உடல்திறன் வெளிப்பாடு. நாட்டுப்புற நடனம், திறன்வெளிப்பாடு, அணிகூட்டம், பாடித் தீ, உலகளாவிய கிராமம், இளைஞர் மன்றம். உணவுத் திருவிழா, ஒருமைப்பாட்டு விளையாட்டு, பல்வண்ண ஒப்பனை பேரணி, வேடிக்கை செயல்பாடுகள், வீரதீர செயல்பாடுகள், அறிவுசார் செயல்பாடுகள், இரவு நடைபயணம், மிதிவண்டி பயணம், இராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை சாகச நிகழ்சிசிகள் நடைபெறும் என்றும், தெரிவித்துள்ளார்.

4. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட மாநிலச் செயலாளர் மற்றும் சிறப்பு அலுவலர் பாரத சாரண சாரணியர் இயக்கம் அவர்களின் கடிதத்தில், தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 25,000 சாரண, சாரணியர்கள், திரிசாரண, திரி சாரணியர்கள், சாரண சாரணிய ஆசிரியர்கள் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பல நாடுகளிலிருந்து சாரண சாரணியர் மாணவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், இவ்விழாவினை சிறப்பாக நடைபெற செய்வதற்கு அதிக நிதி தேவைப்படும் நிலை உள்ளதால் உத்தேச செலவு திட்ட மதிப்பீடு ரூ.39,07,75,000/- (ரூபாய் முப்பத்து ஒன்பது கோடியே ஏழு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்) மட்டும் அனுமதித்து அதற்கான ஒப்புதல் வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. மேற்கண்ட நிலையில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா (Diamond Jubilee National Jamboree) மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழா நடத்திட ரூ.39,07,75,000/- (ரூபாய் முப்பத்தி ஒன்பது கோடியே ஏழு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் மட்டும்) பின்வருமாறு நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

1. மாநில அரசு நிதியிலிருந்து ரூ.5,00,00,000/- (ரூபாய் ஐந்து கோடி மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.

II. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியிலிருந்து ரூ.10,00,00,000/- (ரூபாய் பத்து கோடி மட்டும்) வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

III. மீதத்தொகை ரூ.24,07,75,000/-ஐ (ரூபாய் இருபத்து நான்கு கோடியே ஏழு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) பொது/தனியார் பங்களிப்பு (Contribution from Public and private agencies) வாயிலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

6. மேலே, பத்தி 5(I) -இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும். (கோ. எண். 43-03) 2202 – 00 விளையாட்டுகளும் இளைஞர்நலப்பணிகளும் – 102 மாணவர்களுக்கான இளைஞர்நலத்திட்டங்கள் -மாநிலச்செலவினங்கள் – A A சாரண சாரணியர் இயக்கம் 309 உதவித்தொகை – 01 நடப்புச் செலவுக்கான உதவித்தொகை.

7. மேலே, பத்தி 5(1)-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்திற்கான நிதியில் ரூ.5,00,00,000/- 2024-25-ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். அத்தகைய ஒதுக்கீட்டினை எதிர்நோக்கி மேலே பத்தி 5(1)-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறும் பொருட்டு, ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி (SI) இச்செலவினத்தை 2024-25-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்படவேண்டும். இச்செலவினத்திற்கான உரிய கருத்துருவினை 2024-25-ஆம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கம் மற்றும் துணை மதிப்பீடுகளில் (Supplementary Estimates – 2024-25) சேர்க்கத் தக்க வகையில் உரிய விவரங்களுடன் அரசின் நிதி (வ.செ.பொது-1 & கல்வி II)த் துறைக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

8. இவ்வரசாணை இத்துறையின் மின்கோப்பு எண்.7430/பக5(1)/2024, நாள்09.12.2024ல் நிதித்துறையிடம் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண்.1648 (ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தெட்டு) (IFHRMS ASL No.2024121648)

The post பாரத சாரண சாரணியர் இயக்ககத்தின் தேசிய அளவிலான வைரவிழா, கலைஞர் நூற்றாண்டு நினைவுவிழா நடத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: