கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கம். அதேபோல் நேற்று காலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிலம்பரசன் கோழி இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவி அகிலாண்டேஸ்வரி கழுத்தை சரமாரியாக அறுத்தார்.
இதில், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அகிலாண்டேஸ்வரி பலியானார். மனைவியை கொலை செய்த வேதனையில் அதிர்ச்சியில் உறைந்த சிலம்பரசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து கணவர் தூக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post பல்லடம் அருகே குடும்பத்தகராறில் பயங்கரம் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.