×

ஒற்றை யானை விரட்டியடிப்பு

சூளகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனால், அச்சத்திற்குள்ளான மக்கள் வீடுகளில் முடங்கினர். இதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து அங்கிருந்த ஒற்றை யானையை சின்னக்குத்தி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில், சின்னக்குத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதியான பெரியக்குத்தி, கும்பளம், ராமன் தொட்டி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அந்த யானையை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ஒற்றை யானை விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,A. Chettipalli forest ,Choolagiri taluka ,Krishnagiri district ,
× RELATED டூவீலர் மீது பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி