குடியாத்தம், டிச.11: குடியாத்தம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அமைச்சரிடம் எம்எல்ஏ மனு அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் குடியாத்தம் எம்எல்ஏ அமுலு விஜயன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிச்சனூர் பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், வரும் கல்வியாண்டில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, ஆர்டிஓ சுபலட்சுமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
The post அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அமைச்சரிடம் மனு குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினார் குடியாத்தம் பகுதிகளில் உள்ள appeared first on Dinakaran.