இந்நிலையில் நேற்று காலை 800 வாகனங்களில் இருந்து 7,500 டன் காய்கறிகள் கூடுதலாக வந்து குவிந்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 இருந்து ரூ.250க்கும், பெரிய வெங்காயம் ரூ.90 இருந்து ரூ.50க்கும், சின்னவெங்காயம் ரூ.90 லிருந்து ரூ.70க்கும் தக்காளி ரூ.50லிருந்து ரூ.30க்கும் கேரட் ரூ.80லிருந்து ரூ.50க்கும் இஞ்சி ரூ.300லிருந்து ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறாக அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைந்துள்ளது.
இதுதவிர, ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.36க்கும், பீன்ஸ் ரூ.65க்கும், பீட்ரூட் ரூ.40க்கும், சவ்சவ் ரூ.20க்கும், முட்டைகோஸ் ரூ.27க்கும், வெண்டைக்காய் ரூ.45க்கும், கத்தரிக்காய் ரூ.30க்கும், காராமணி ரூ.80க்கும் பாகற்காய், சுரக்காய் ரூ.45க்கும், புடலங்காய், வெள்ளரிக்காய் ரூ.40க்கும், சேனைக்கிழங்கு ரூ.55க்கும், சேனை கிழங்கு ரூ.50க்கும், காலிபிளவர் மற்றும் பச்சை மிளகாய் ரூ.35க்கும், பட்டாணி ரூ.70க்கும், அவரைக்காய் ரூ.60க்கும் பீர்க்கன்காய், எலுமிச்சை பழம், கொத்தவரங்காய் ரூ.50க்கும், நூக்கல் ரூ.30க்கும், கோவக்காய் ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பூக்கள் வருகிறது. சில நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி பூக்கள் விலை இருந்தது. இந்நிலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐஸ் மல்லி ரூ.600க்கும், ஜாதி மல்லி, முல்லை ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.650க்கும், அரளி ரூ.400க்கும், சாமந்தி ரூ.120க்கும், சம்பங்கி ரூ.150க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.220க்கும், பன்னீர் ரோஸ் ரூ.130க்கும் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு: தீபத்தை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.