சென்னை: போக்குவரத்து கழக பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சேமிப்பு சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மூலம், எந்த ஒரு கூடுதல் தொகையும் செலுத்தாமல், வங்கிகளுடன் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்டிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, சேமிப்பு சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மூலம் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த அனைத்து வங்கிகளுடன் கலந்து ஆலோசணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் ேபங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டங்களை வழங்க முன் வந்துள்ளது. இந்த சலுகை பெற எந்த ஒரு கூடுதல் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் பணியாளர்களின் சம்பள கணக்கு பராமரிக்கும் இதர வங்கிகளுடனும் காப்பீட்டு திட்டங்களை வழங்கிட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பணியாளர் மொத்த ஊதியம் கால காப்பீட்டு தொகை தனிப்பட்ட விபத்து காப்பீட்டு தொகை
* கனரா வங்கி
ரூ.50,000 வரை ரூ.3 லட்சம் ரூ.16 லட்சம்
ரூ.50,000 முதல்
ரூ.1 லட்சம் வரை ரூ.4 லட்சம் ரூ.26 லட்சம்
ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை ரூ.5 லட்சம் ரூ.44 லட்சம்
ரூ.1.50 லட்சத்திற்கு மேல் ரூ.6 லட்சம் ரூ.54 லட்சம்
* இந்தியன் வங்கி
ரூ.50,000 வரை ரூ.4 லட்சம் ரூ.50 லட்சம்
ரூ.50,000 மேல் ரூ.5 லட்சம் ரூ.50 லட்சம்
* பேங்க் ஆப் பரோடா
ரூ.50,000 வரை ரூ.2 லட்சம் ரூ.30 லட்சம்
ரூ.50,000 முதல்
ரூ.1 லட்சம் வரை ரூ.4 லட்சம் ரூ.40 லட்சம்
ரூ.1 லட்சத்திற்கு மேல் ரூ.7 லட்சம் ரூ.60 லட்சம்
The post போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் காப்பீடு திட்டம்: எம்டிசி தகவல் appeared first on Dinakaran.