மூலிகைகளின் அற்புதங்கள்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

* ஆடு தீண்டாப்பாளை, நாகதானிக்கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை… இம்மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விஷ ஜந்துகள், பாம்புகள் நெருங்காது.

* அறுகம்புல் உடல் எடையை குறைக்கும். ரத்த சுத்தி செய்யும்.

* வேம்பு குடல் வால் அரிப்பு, சொறி, சிரங்கு, சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்து.

* வல்லாரை நினைவாற்றலை அதிகப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும்.

* நித்ய கல்யாணி நீரிழிவு நோயை குணப்படுத்தும் மூலிகை.

* இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் பலவற்றில் முக்கியமான மூலப் பொருள் கடுக்காய் தான். இது குடல் புண்ணை ஆற்றுவதோடு மலச்சிக்கலையும்
நீக்கும்.

* சுக்கு ஒரு வர்ம மூலிகை. வர்மத்தில் அடிபட்டவருக்கு சுக்கு கஷாயம் குடிப்பதற்கு கொடுக்க வேண்டும். தினமும் மூன்று வேளை வீதம் ஐந்து நாட்களுக்கு குடித்து வர குணம் கிடைக்கும்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

 

The post மூலிகைகளின் அற்புதங்கள் appeared first on Dinakaran.

Related Stories: