மது போதையில் தகராறு நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை

*திருவாரூர் தொழிலாளி கைது

லால்குடி, டிச.10: லால்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த திருவாரூரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் காளச்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அஜித்குமார்(27). அதே பகுதியை சேர்ந்த பூசாந்திரம் மகன் சதீஷ்(29). நண்பர்களான இருவரும், திருச்சி- லால்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் கல் பதிக்கும் வேலை செய்து வந்தனர். இதற்காக லால்குடி ஆங்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

விடுமுறை நாளான நேற்றுமுன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் அஜித்குமார் அலறி துடித்ததால் சதீஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்று அஜித்குமார் தூங்கினார். அப்போது அவருக்கு உடம்பில் வலி அதிகமானதால் அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து அஜித்குமாரை சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து லால்குடி இன்ஸ்பெக்டர் முத்தையா வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறார்.

The post மது போதையில் தகராறு நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: