அப்போது எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த லாரி சாலையின் குறுக்கே வந்த தனியார் பேருந்தை அதிவேகமாக மோதியது. அதில், பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இத்தகைய காட்சி சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி வெளியாகியுள்ளது.
இத்தகைய விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விபத்தில் சிக்கிய தொழிற்சாலை ஊழியர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் லாரி ஓட்டுனரை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிசிடிவி காட்சி வெளியீடு appeared first on Dinakaran.