லாரியில் இருந்து கொட்டியதால் சாலையில் ஆயில் கழிவு: வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்


பூந்தமல்லி: சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கழிவு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனங்கள் திடீரென நின்றதால் எண்ணெய் கழிவு ஏற்றி வந்த லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் லாரியில் கொண்டு வந்த எண்ணெய் கழிவு வழிந்து சாலையில் கொட்டியது. இதனால் சாலை முழுவதும் எண்ணெய் கழிவு படலமாக மாறியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் வழுக்கி விழுந்தனர்.

தகவலறிந்த போரூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் கொட்டிய எண்ணெய் கழிவை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு சாலையில் கொட்டிய எண்ணெய் கழிவு முழுவதும் சுத்தம் செய்த பிறகே அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

The post லாரியில் இருந்து கொட்டியதால் சாலையில் ஆயில் கழிவு: வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: