×

போளூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தது ஆடுவெட்டி பூைஜ விவசாயிகள் மகிழ்ச்சி

போளூர், டிச. 10: போளூர் பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து மலர்கள் தூவி வணங்கி ஆடு வெட்டி கொண்டாடினர். போளூர் நகர் சம்பத்ரி மலை அடிவாரத்தில் கிட்டத்தட்ட 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட போளூர் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு செய்யாற்றிலிருந்து 70 சதவீதம் தண்ணீரும், மஞ்சளாற்றில் இருந்து 30 சதவீத தண்ணீரும் வருவது வழக்கம். இதனால் மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பி வழியும். இதனிடையே எலத்தூர் அணைக்கட்டு உடைந்து சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் வருவது நின்று விட்டது. ஜவ்வாதுமலை மஞ்சளாற்று இருந்து மட்டும் மழைக்காலங்களில் தண்ணீர் வந்தது. 2017ம் ஆண்டுக்கு பிறகு 2021ம் ஆண்டு தான் மீண்டும் நிரம்பி வழிந்தது. இதனால் இந்த ஏரி தண்ணீர் குடிப்பதற்காக மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக இந்த ஏரியில் எப்போதும் 50 சதவீத தண்ணீர் இருந்து வந்தது.

கடந்த வாரம் ஜவ்வாதுமலையில் பெரிய கனமழையால் மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வழியில் அத்திமூர், பெரியகரம், மாம்பட்டு ஆகிய ஏரிகள் நிரம்பி கடைசியாக நேற்று போளூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. அதை தொடர்ந்து விவசாயிகள், நகர மக்கள் வழக்கப்படி போளூர் மக்களின் குலதெய்வ கோயிலான தும்பைநாச்சியம்மன் கோவில் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தும்பை நாச்சியம்மன் கோயில் தர்மகர்த்தா கிருஷ்ணமூர்த்தி, பேருராட்சி தலைவர் ராணிசண்முகம், அறங்கால குழு தலைவர் பாபு ஆகிய தலைமையில் நிர்வாகிகள் பூஜைகள் செய்து தண்ணீரில் மலர்கள் தூவி வழிபாடு செய்தனர். அதன் பிறகு ஆடுகள் வெட்டி பிரியாணி செய்து மக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

The post போளூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தது ஆடுவெட்டி பூைஜ விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Aduvetti Pooja ,Bolur Periya Lake ,Polur ,Bolur Nagar ,Sampadri Hill ,Bolur ,Dinakaran ,
× RELATED போளூர் பகுதியில் பெஞ்சல் புயல் கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்