நீடாமங்கலம், டிச.10: திமுக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரதராஜ பெருமாள் கட்டளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ராஜகோபாலசுவாமி கோவில் அறங்காவலர் கருடர் இளவரசன், ஒன்றிய அவை தலைவர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி நடேசமணி , மாவட்ட மகளிர் அணி தலைவர் ராணி சேகர், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post நீடாமங்கலம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் appeared first on Dinakaran.