×

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

 

கரூர், டிச. 10: ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடுவதை கண்டித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ (எம்) கட்சியின் மாவட்ட தலைவர் ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கரூர் வையாபுரி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடுவதை கண்டித்து இந்த அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கரூர் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,RMS ,CPI ,president ,Jyoti Basu ,Karur RMS ,Dinakaran ,
× RELATED சமுதாய முன்னேற்றம் அடைய பெண்கள்...