அவளின் அழகை நினைத்து இருப்பு கொள்ளாமல் தவித்தான்.ஆர்வத்துடன் கிளம்பினான். வழியில் திடீரென்று மனத்தில் ஓர் உதிப்பு.“இறைத்தூதர் அவர்கள் நாளை என்னைப் பார்க்கும்போது ‘நேற்று என்ன செய்தாய்’ என்று கேட்டால் என்ன மறுமொழி சொல்வது?“பொய் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளேன்.“முறையற்ற பாலுறவில் ஈடுபட்டேன் என்று சொன்னால் அதற்குரிய தண்டனையைத் தாஹா நபி தந்துவிடுவாரே? ஐயோ, அந்தக் கடும் தண்டனையை யார் தாங்குவது?”அதிர்ந்து போய் அப்படியே திரும்பிவிட்டான்.அன்றோடு தவறான பாலுறவு எனும் தீய பழக்கம் அவனிடமிருந்து அடியோடு மறைந்தது.திருட்டுப் பழக்கமும் அப்படித்தான். “திருடினேன்” என்று சொன்னால் திருநபி தண்டிக்காமல் விடுவாரா?கையே போய்விடுமே.பொய், திருட்டு, தவறான பாலியல் உறவு ஆகிய மூன்று தீய செயல்களில் இருந்தும் முழுமையாக விடுபட்டான்.இறையச்சத்துடன் வாழத் தொடங்கினான். “ஒழுக்கம்தான் உயிர்” எனத் தெரிந்தான், தெளிந்தான்.
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“யார் பாவமன்னிப்புக் கோருபவராக விளங்கி, தம் செயல்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ….. அவர்கள் இறைநம்பிக்கையாளர்களுடன் இருப்பர்.”
(குர்ஆன் 4:146)
The post எதை விடுவது? இஸ்லாமிய வாழ்வியல் appeared first on Dinakaran.