திருவாரூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி கை துண்டானது

திருவாரூர் : திருவாரூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளியின் இடது கை தூண்டானது.ராமநாதபுரம் கள்ளர் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயக்குமார்(42). திருமணம் ஆகவில்லை. நாகையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார்.

அவ்வப்போது ரயில் பயணிகளிடம் யாசகம் பெற்றும் பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் திருச்சியில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்கால் சென்ற பாசஞ்சர் ரயிலில் படி ஓரத்தில் அமர்ந்தவாறு ஜெயக்குமார் பயணம் செய்துள்ளார். அடியக்கமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோது திடீரென ஜெயக்குமார் தவறி கீழே விழுந்தார்.

இதையடுத்து ரயில் பயணிகள் மூலம் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் வந்து ஜெயக்குமாரை மீட்டபோது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதுடன் இடது கையில் முழங்கை துண்டானது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி கை துண்டானது appeared first on Dinakaran.

Related Stories: