சப்பாணிப்பட்டியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு

 

காவேரிப்பட்டணம், டிச.9: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பையூர் ஊராட்சி சப்பாணிப்பட்டியில் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி தலைமை வகித்தார். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் ஊராட்சி தலைவர் மாதவன், நகர செயலாளர் விமல், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவரணி மோகன், ஒன்றிய துணை செயலர்கள் விக்ரம் குமார், அம்பிகா கசரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சப்பாணிப்பட்டியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: