பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்திற்கு 10 டன் அரிசி, நிவாரண பொருட்கள்: எம்எல்ஏக்கள் அனுப்பி வைத்தனர்

 

திருவள்ளூர், டிச. 9: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 டன் அரிசி, நிவாரண பொருட்களை எம்எல்ஏகள் எஸ்.சந்திரன் மற்றும் வி.ஜி.ராஜேந்திரன் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 டன் அரிசி பைகள் மற்றும் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து கொடியசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட அவைத்தலைவர் க.திராவிட பக்தன், தொகுதி பார்வையாளர்கள் மாஸ்டர் பெ.சேகர், சண்முகநாதன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, கே.எம்.சுப்பிரமணி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் வி.எஸ்.நேதாஜி, தா.மோதிலால், பொன்.பாண்டியன்,கொப்பூர் டி.திலீப்குமார், பட்டரை கே.பாஸ்கர், காஞ்சிப்பாடி பி.சரவணன், எம்.எம்.லிங்கேஷ் குமார், வி.எஸ்.சதீஷ், மணிகண்டன், ஆர்.வாசு, வா.சங்கர், ராஜேஸ்வரி கைலாசம், பவளவண்ணன், பெருமாள், வேதாச்சலம், சுரேஷ்குமார், அஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்திற்கு 10 டன் அரிசி, நிவாரண பொருட்கள்: எம்எல்ஏக்கள் அனுப்பி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: