×

புகளூர் மேகபாலீஸ்வரர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம்பாளையம், டிச.9: கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,தேன் ,விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் ,பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

இதேபோல திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயிலில் உள்ள காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேட்டு ஈஸ்வரன் கோயிலில் உள்ள காலபைரவர் ,புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவன நாதர் கோயிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post புகளூர் மேகபாலீஸ்வரர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Varapirai Ashtami ,Meghapaleeswarar Temple ,Bukhlur ,Velayuthampalayam ,Karthikai month ,Varapirai ,Ashtami ,Nansey Pukhalur ,Meghapaleswarar temple ,Karur district ,Kalabhairava ,
× RELATED வேலாயுதம்பாளையம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு