செய்யாறு: செய்யாறு அருகே நள்ளிரவில் அடகு கடையில் வெள்ளிப்பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சியை வைத்து 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷோகன்லால்(45). இவர் செய்யாறு சிப்காட்-ஆக்கூர் கூட்ரோட்டில் அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து ேஷாகன்லாலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஷோகன்லால், கடையின் பூட்டுகள், ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
இதுகுறித்து தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் டிஎஸ்பி சண்முகவேலன், இன்ஸ்பெக்டர்ேகாகுல்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கடையில் வெளிப்புற ஷோகேஷில் இருந்த சுமார் 200 கிராம் வெள்ளியால் ஆன கம்மல், ஜிமிக்கி உள்ளிட்ட பொருட்களும், 800 ரூபாயும் திருட்டு போனது தெரியவந்தது. உள் அறையில் இருந்த இரும்பு லாக்கர் திறக்க முயன்றதும் தெரியவந்தது.
The post அடகுகடையில் வெள்ளிப்பொருட்கள் திருட்டு சிசிடிவி காட்சி மூலம் 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.