திருப்பூர், டிச.9: திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் நேற்று கும்மி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 5 வயது முதல் 75 வயது வரையிலான ஆண் பெண் என 5 ஆயிரம் பேர் ஒரே சீருடை அணிந்து தமிழ்தாய்வாழ்த்து,கடவுள்,இயற்கை சார்ந்த பாடல் மற்றும் இசைக்கேற்றவாறு நடனம் ஆடினர். கும்மி சங்கமம் நிகழ்ச்சியை காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதில் பங்கேற்ற பெண் கலைஞர் கூறுகையில்:பாரம்பரியமான கும்மி கலையை முறைப்படி கற்று அரங்கேற்ற நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். கும்மி கலையானது வெறும் நடனமாக மட்டுமல்லாது உடலுக்கும் மனதுக்கும் வலு சேர்க்கும் பயிற்சியாகவும் இருந்து வருகிறது.அதன் காரணமாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் பயிற்சி பெற்று அரங்கேற்றங்களில் கலந்து கொண்டு வருவதாக தெரிவித்தார்.
The post திருப்பூரில் கும்மி சங்கமம் appeared first on Dinakaran.