திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 16ம் தேதி வரை விடுமுறை தீபத் திருவிழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை, டிச.8: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு போலீசார் தங்க வைக்கப்படும் 156 பள்ளிகளுக்கு வரும் 16ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது வரும் 13ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது ஏனலையில் தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர் அதையொட்டி திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போலீசார் தங்க வைக்கப்பட உள்ளனர். எனவே, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 156 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை விடுமுறை அறிவித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

The post திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 16ம் தேதி வரை விடுமுறை தீபத் திருவிழாவை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: