போச்சம்பள்ளி, டிச.8: போச்சம்பள்ளி அடுத்த புலியூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் உள்ள மேட்டுக்கடை பகுதியில், சாலையோரம் 100 வருட பழமைவாய்ந்த புளியமரங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், மேட்டுக்கடை பகுதியில் உள்ள பழமையான புளியமரம் அடியோடு சாய்ந்து, அப்பகுதியில் வசித்து வரும் விவசாயியான முரளி(45) என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டின் முன்பகுதி சேதமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயங்களின்றி தப்பினர். இதுகுறித்த தகவலின் பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று, அப்பகுதி மக்களின் உதவியோடு புளியமரத்தை அகற்றினர்.
The post வீட்டின் மீது முறிந்து விழுந்த புளிய மரம் appeared first on Dinakaran.