×

ஆவணம் இல்லாமல் வெடி பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது

க.பரமத்தி, டிச.8: க.பரமத்தி அடுத்த கோடந்தூர் கரிமாபுதூரை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டுவதற்காக வெடி பொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. க.பரமத்தி காவல் ஆய்வாளர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.அதில் கிணறு தோண்டும் வேலைக்காக உரிய ஆவணங்கள் இல்லாமல் வெடிப்பொருள்கள் வைத்திருந்த திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரலப்பூரை சேர்ந்த அண்ணாமலை மகன் சக்தி (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 29 தோட்டா, 12 தாயத்து, 1 பேட்டரி ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வெடி மருந்து குடோன் உரிமையாளர் மூலனூரை சேர்ந்த சிதம்பரம் என்பவரை தென்னிலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஆவணம் இல்லாமல் வெடி பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Paramathi ,Garimaputhur ,Kodandur, Paramathi ,K. ,Police Inspector ,Jagannath ,Dinakaran ,
× RELATED கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் விவசாய உபகரணங்கள் விற்பனை அமோகம்