மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

 

கூடலூர், டிச. 8: தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள காவல் நிலையத்திற்கு பவர் ஹவுஸ் அருகே முல்லைப் பெரியாற்றில் பிணம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ ஆசிர்வாதம் தலைமையிலான குமுளி போலீசார் தீயணைப்பு துறை மூலம் ஆற்றில் கிடந்த உடலை மீட்டு, இறந்தது யார் என்று விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் ஆற்றில் இறந்து கிடந்தவர் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (40 ) என்பதும், இவர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. திருமணம் முடிந்து தனது பெற்றோர்களுடன் வாசித்து வரும் இவர் நேற்றைய முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீட்டுக்கு திரும்பாதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவரைதேடி வந்ததாகவும் தெரியவந்தது. இந்நிலையில்தான் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வனிதாமணி விசாரணை செய்து வருகிறார்.

The post மாயமான வாலிபர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: