வீட்டுக்குள் ஓடி தன் குழந்தையை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தே விட்டான். அங்கே அவன் பார்த்த காட்சி: ஒரு பக்கம் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. மறுபக்கம் குதறப்பட்ட நிலையில் ரத்தம் சிதறிக்கிடக்க ஒரு பாம்பு இறந்திருந்தது. அப்போதுதான் அவனால் யூகிக்க முடிந்தது’ தன் ஜீவனையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தையை காப்பாற்றிய கீரிப்பிள்ளையை தனது ஆத்திரத்தால் கொன்றுவிட்டோமே என்று கண்ணீர் விட்டான்.இறைமக்களே, இறைவேதாகமம் முன்கோப குணம் கொண்டவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. கோப உணர்வு அனைத்து மனிதர்களுக்கும் இயல்பானது தான் என்றாலும் அதனை கண்ணாடி குடுவையை கையாள்வது போன்று எச்சரிக்கையுடனும், பக்குவத்துடனும் கையாள வேண்டும். முன்கோபம், ஆத்திரம் என்பது நோயல்ல என்றாலும், அது பிணியை விடக் கொடியது.
நோய் வந்தால், அதனால் பீடிக்கப்பட்டவன் மட்டுமே பாதிக்கப்படுகிறான். ஆனால் முற்கோபமானது, கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்தவர்களையும் சாகடித்துவிடும்.கோபம், பிறரைப் புண்படுத்துகிறது என்பது உண்மை என்றாலும், உண்மையில் அது நம்மைத் தான் எரித்துப் போடுகிறது என்பதை யாரும் சிந்திப்பதில்லை. ஒரு மனிதன் கொந்தளித்துக் கோபம் கொள்ளும் போது, அவனது உடலின் இயக்கு நீர்களின் சுரப்பு மாறுபடுகிறது. இதனால் மூளை மன்னிப்புக்கு இடங்கொடுக்காது. சூழ்நிலையைப் புறக்கணிக்கும். கடின வார்த்தைகள் உதிர்க்கும். ஆலோசனையை அலட்சியம் பண்ணும்; உறவுகளை மதிக்காது, நான்தான் சரி என்பதுபோல நம்மைப் பேசவைக்கும். தொடர்ந்து உடலிலே வியாதிகளை உருவாக்கிவிடும்.இதைத்தான், ‘‘உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே’’ (பிர.7:9) என்றும், ‘‘முற்கோபி மதிக்கேட்டைச் செய்வான்’’ (நீதி.14:17) என்றும், ‘‘நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்’’ (நீதி.14:29) என்றும் இறைவேதம் வாயிலாக இறைவன் ‘‘மனிதர்களை கோபம் கொள்ளாதீர்கள்’’ என மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார்.
– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.
The post கோபம் கொடியது! appeared first on Dinakaran.