- நீடாமங்கலம்
- கொண்டியார்பாலம்
- களச்சேரி இணைப்புச் சாலை
- களச்சேரி
- கொண்டியார் பாலம்
- திருவாரூர் மாவட்டம்
- கொண்டியார்
- தஞ்சை சாலை
நீடாமங்கலம், டிச. 7: நீடாமங்கலம் அருகில் உள்ள கொண்டியார் பாலத்தில் இருந்து காளாச்சேரி இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இருந்து தஞ்சை சாலையில் உள்ள கொண்டியாறிலிருந்து காளாச்சேரி இணைப்பு சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்த சாலையில் காளாச்சேரி, மேலப்புவனூர், கீழப்பட்டு, எடமேலையூர், எட அன்னவாசல், எடைக்கீலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த சாலையில் மின் வசதி இல்லாததால் மாலை நேரங்களில் பள்ளிக்கு சென்று விட்டு வரும் மாணவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நீடாமங்கலம் அடுத்த கொண்டியார்பாலம் காளாச்சேரி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?.. மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.