நீடாமங்கலம், டிச. 7: நீடாமங்கலத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நீடாமங்கலம் ஒன்றியம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும் செலுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராதா, விவசாய சங்கத்தினுடைய ஒன்றிய செயலாளர் டேவிட், மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜான் கண்ணாடி, ஒன்றிய நிர்வாகக்குழு கலியபெருமாள், அசோக் ஒன்றிய குழு உறுப்பினர் இளையரசன்,ராஜா,ராஜகுரு மற்றும் நகரத் துணைச் செயலாளர் ஆரோக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அம்பேத்கர் நினைவு தினம் கட்சி பிரமுகர்கள் மரியாதை appeared first on Dinakaran.