விராலிமலை,டிச.7: விராலிமலை ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக நவம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை 10 மையங்களில் 200 கற்போருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்றல் கற்பித்தல் வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சிவிராலிமலை வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் வளர்மதி செயல்பட்டு திட்டத்தின் சிறப்புகள் பற்றியும் கற்போருக்கு தேவையான அடிப்படைத் திறன்களான வாசித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவு பற்றி எடுத்து கூறினார்
மேலும், கற்போர்கள் வங்கியில் பணம் செலுத்துதல் தேவைக்கு பணம் எடுத்தல் மற்றும் தானியியங்கி எத்திரத்தின் செயல்பாடுகள் அடிப்படை தேவைகளுக்கு எழுத்து குறித்து கையாளும் முறைகள் குறித்து கருத்தாளர்கள் விளக்கமாக கூறினார்கள் மேலும், ஒன்றியத்தில் 10 மையங்களில் 10 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர். 10 மையங்களில் 200 கற்போருக்கு கற்றல்,கற்பித்தல் உபகரணங்களான சிலேட், எழுதுகோல், நோட்டு, நோட் பென்சில், கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் வளர்மதி நன்றி கூறினார்.
The post விராலிமலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.