பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

கடலூர், டிச. 7: கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடலூர் கோண்டூர், நத்தப்பட்டு ஊராட்சிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடலூர் மாவட்டம் தமிழகத்தின் வடிகால் மாவட்டமாக அமைந்துள்ளது. பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் தொடர்கதை ஆகியுள்ளது. ஒன்றிய அரசு கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

ஒன்றிய அரசு பெருமழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கூடுதல் நிதியை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து அரிசி, போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மீனவர் அணி மாவட்ட தலைவர் கடல் கார்த்திகேயன், ஓபிசி மாவட்ட தலைவர் ராமராஜ், முன்னாள் வட்டார் தலைவர் அன்பழகன், ராஜாராம், ஓபிசி மாநில செயலாளர் உமாபதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம், ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது, அப்துல் காதர், அப்துல் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், பண்ருட்டி தொகுதி தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: