புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

மங்கலம்பேட்டை, டிச. 7: மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அருகே உள்ள மணக்கொல்லை கிராமத்தில் ஆலடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மெயின் ரோடு பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி கலைச்செல்வி(35) என்பவர், தனது பெட்டிக் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 20 கிராம் எடையுள்ள 90 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை செய்த பணம் ₹1150 ஆகியவற்றை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கலைச்செல்வியை கைது செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: