மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி

திண்டிவனம், டிச. 7: திண்டிவனம் நத்தமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாண்டுரங்கன் (38). இவர் நேற்று நத்தமேடு பகுதியிலிருந்து மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார்மோதியதில் பாண்டுரங்கன் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்தது வந்த திண்டிவனம் நகர போலீசார் பாண்டுரங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: