அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை


புதுடெல்லி: அசாம் போலவே ஒடிசாவிலும் உணவகம், பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் புதிய விதிகளின்படி உணவு விடுதிகள், ஆன்மிகம், திருமணங்கள் உள்ளிட்ட பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜ ஆளும் ஒடிசா மாநில அரசும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ஒடிசா முதல்வரான மோகன் சரண் மாஜி, தம் மாநிலத்திலும் பசுவதை தடை சட்டத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சட்டத் திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஒடிசாவின் எதிர்கட்சிகள் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிரமிளா மல்லீக் மற்றும் காங்கிரஸின் தாரா பிரசாத் பஹினிபதி ஆகியோர் மாட்டிறைச்சி ஏற்றுமதியை முதலில் தடை செய்யும்படி வலியுறுத்தி உள்ளனர்.

The post அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: