20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18.81 லட்சம் புதிய உறுப்பினர்கள் பதிவு


சென்னை: தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த மூன்றரை ஆண்டுகளில், 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களை பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுப்பெற்றுள்ள 25,35,546 உறுப்பினர்களுக்கு ரூ2,106 கோடி வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. மேலும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18.81 லட்சம் புதிய உறுப்பினர்கள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: