செய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்ட லாரி டிரைவர் மீட்கும் பணி தீவிரம் கலசபாக்கம் அருகே

கலசபாக்கம், டிச.7: கலசபாக்கம் அருகே செய்யாற்றில் அடித்து செல்லப்பட்ட லாரி டிரைவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(53), லாரி டிரைவர். நேற்று காலை வெங்கடேசன் தனது கிராமத்திலிருந்து கலசபாக்கத்திற்கு வந்தார். அங்கு டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, செய்யாற்றில் இறங்கி தண்ணீரில் நடந்து சென்றார். அப்போது திடீரென அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் மற்றும் போளூர் தீயணைப்பு படையினனர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post செய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்ட லாரி டிரைவர் மீட்கும் பணி தீவிரம் கலசபாக்கம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: