திருத்தணி: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டு மத்திய ஒன்றியத்தில் திமுக கிளை கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரி ஆகிய கிராமங்களின் கிளை செயலாளர்கள் பொன்.சு.பாரதி, ஏழுமலை, ஆரோன், சம்பத், ரவி கங்காதரன், அருள் பாண்டியன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் திருத்தணி தொகுதி பார்வையாளர் சண்முகநாதன், பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பி.டி.சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், துனை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வாய்ப்பு தந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்தணி மேற்கு ஒன்றியம் தாடூர் ஊராட்சியில் உள்ள 8 கிளைகளில் கிளை செயலாளர்கள் குணசேகர், மார்க்கண்டேயன், சங்கர், தனஞ்ஜெயன், மோகன்ராஜ், அந்தோணி, ரவி, சந்திரசேகர், பாபு பிரவீன், வேலு, கோபால் ஆகியோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டங்களில் மாவட்ட பிரதிநிதி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நரசிம்ம ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோதண்டன் ஆகியோர் கலந்துகொண்டு கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
The post சொரக்காய்பேட்டையில் திமுக கிளை கூட்டம் appeared first on Dinakaran.