அலங்காநல்லூர், டிச. 6: உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா, அங்குள்ள முதன்மை தெய்வமான முனியாண்டி கோயிலில் நடைபெறும் வழிபாட்டுடன் துவங்குவது வழக்கம். இக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று அங்குள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் பதவியேற்றனர். இதன்படி அறங்காவலர் குழு தலைவராக அமுல் ராணி ரகுபதி மற்றும் உறுப்பினர்களாக பெரியசாமி, சந்திரன், கணேசன், மாரிச்சாமி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் உதவி ஆணையர் வளர்மதி ஆகியோர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதும்பு தனசேகர், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பால்பாண்டியன் உள்ளிட்ேடார் கொண்டனர்.
The post அலங்காநல்லூர் கோயிலில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு appeared first on Dinakaran.