புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மன்மோகனுக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உட்பட 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு இடம் காலியாக உள்ளது.