சேலம், டிச.6: சேலம் மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். அப்போது தங்களுக்கு விருப்பமான 3 காவல்நிலையங்களில் ஏதாவது ஒரு காவல்நிலையத்தை அவர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் தற்போது நான்கு ஆண்டுகளை தாண்டியும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட வில்லை. இதனால் மாநகர போலீசார் இடமாற்றம் கேட்டு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘ஒரே இடத்தில் பணியாற்றும்போது சிலருக்கு சாதகமாக பணியாற்றக்கூடிய சூழல் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போலீசார் இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால் தற்போது நான்கு ஆண்டுகள் தாண்டியும் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைந்து இடமாற்றம் செய்ய வேண்டும்,’’ என்றனர்.
The post ஒரே இடத்தில் 4 ஆண்டுகளாக பணி இடமாற்றம் கேட்டு போலீசார் மனு appeared first on Dinakaran.