×

கேரள அரசின் பூஜா பம்பர் தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு JC 325526 என்ற எண்ணுக்கு விழுந்தது. ரூ.12 கோடி அதிர்ஷ்டசாலி கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் என தெரியவந்துள்ளது. நிதி நிறுவன தொழிலாளியான இவருக்கு ரஷ்மி என்ற மனைவியும், பள்ளியில் படிக்கும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவர் கொல்லத்திலுள்ள ஒரு லாட்டரி கடையில் 10 டிக்கெட்டுகளை வாங்கினார். அதில் ஒரு டிக்கெட்டுக்குத் தான் முதல் பரிசு கிடைத்துள்ளது.

The post கேரள அரசின் பூஜா பம்பர் தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு appeared first on Dinakaran.

Tags : Kerala Govt ,Thiruvananthapuram ,Pooja bumper ,Kerala government ,Dinesh Kumar ,Karunagappalli, Kollam district ,Dinakaran ,
× RELATED கேரள பூஜா பம்பர் லாட்டரி: 12 கோடி ரூபாய் பரிசை வென்ற பால் பண்ணை ஊழியர்..!!