ஓசூர், டிச.6: ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் நாளை(7ம் தேதி) நடைபெறுவதாக இருந்த சங்கல்ப யாகம் மற்றும் அசுவமேத யாகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழா குழு தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது: உலக மக்கள் நன்மைக்காக, ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள திடலில், மகா சங்கல்ப யாகம், அசுவமேத யாகம் ஆகியவை நாளை(7ம் தேதி) முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெற இருந்தது. தொடர் மழை காரணமாக, திருவண்ணாமலையில் இருந்து தேவையான மூலிகைகள் வராததால், இந்த யாகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாகம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சங்கல்ப யாகம் ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.