கிருஷ்ணகிரி மோட்டூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, டிச.6: கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி, மோட்டூர் காலனியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம்(4ம் தேதி) காலை புனித நீர் கொண்டு வருதல், அம்மனுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முளைப்பாரி ஊர்வலம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, மகா மாரியம்மனுக்கு முதல்கால வேள்வி, 108 மூலிகை திரவிய வேள்வி, மகா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடந்தது. நேற்று கோபூஜையை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் சித்ரா, ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கே.ஆர்.பி. அணை செல்லியம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவம் குழுவினர், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post கிருஷ்ணகிரி மோட்டூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: