×

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள் (முதல்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அறிவியல் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராதவர்கள்) அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு செப்டம்பர் 2ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேதிகளில் பதிவு செய்யாத மாணவர்கள் டிசம்பர் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்த ஒப்புகை சீட்டுகளை சமர்ப்பித்து அறிவியல் பாட எழுத்து தேர்வுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில், பதிவுக்கட்டணம் ரூ.125 செலுத்தி செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்துகொள்ள வேண்டும்.

The post 10ம் வகுப்பு செய்முறை தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...