சையத் முஷ்டாக் அலி டிராபி டி20யில் 349 ரன் குவித்து பரோடா உலக சாதனை

இந்தூர்: டி20 போட்டியில் 349 ரன் குவித்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடர் இந்தூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பரோடா – சிக்கிம் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பரோடா அணி துவக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி 5 ஓவர்களில் 90 ரன்களை குவித்தது. துவக்க வீரர்களான ஷஸ்வத் ராவத் 43 (16), அபிமன்யு சிங் 53 (17) ரன் குவித்தனர். 3வதாக களமிறங்கிய பானு பானியா 51 பந்துகளில் 134 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடக்கம்.

பின்னர் களமிறங்கிய ஷிவாலிக் சர்மா 55 (17), சோலங்கி 50 (16) அரை சதம் விளாச, நிர்ணயித்த 20 ஓவர்களில் பரோடா 5 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்து, டி20யில் அதிக ரன் குவித்த அணி என்ற உலக சாதனையை படைத்தது. முன்னதாக கடந்த அக்டோபரில் காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே 344 ரன்களை எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. இச்சாதனை தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் களமிறங்கிய சிக்கிம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை மட்டுமே எடுத்து, 263 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

The post சையத் முஷ்டாக் அலி டிராபி டி20யில் 349 ரன் குவித்து பரோடா உலக சாதனை appeared first on Dinakaran.

Related Stories: