மதுராந்தகம்: தேசிய ஊரக வேலை கேட்டு அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை கேட்டு அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோதண்டம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், அர்ஜுன்குமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
The post தேசிய ஊரக வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.