ஆர்.எஸ்.மங்கலம், டிச.5: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே சவேரியார்பட்டிணம் விலக்கு பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் எங்கு ஏதேனும் தீ விபத்து உள்ளிட்ட பேரிடர் எது நடந்தாலும் இங்கிருந்து தான் தண்ணீர் நிரப்பிய வாகனத்தில் மீட்பு படை வீரர்கள் அவசரமாக சென்று தான் தீயணைப்பு உள்ளிட்ட மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கமாக உள்ளது. இவ்வளவு முக்கியம் வாய்ந்த இந்த தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு பக்கமாக சுமார் 200 மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது.
ஆனால் புதிதாக கட்டிடம் கட்டப்பட்ட பகுதி வரை புதிய சாலை அமைக்க படாமல் விட்டு விட்டதால் சிறுமழை பெய்தால் கூட ரோடு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ஆகையால் இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த இப்பகுதிக்கு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சம்மந்தபட்ட நிலையங்கள் வரை உள்ள சாலையை அடுத்த மழை காலம் வருவதற்கு முன்பாகவே உடனடியாக சீரமைத்திட உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புதிய தார்ச்சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.