மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்

மல்லசமுத்திரம், டிச.5: மல்லசமுத்திரம் வட்டார வள மையத்தில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) ராஜராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு பயிற்றுநர்கள் பூமாதேவி, ஜென்சிராணி, செல்வகுமார், பொற்கொடி, மனோன்மணி, இயன்முறை மருத்துவர் மஞ்சு, பள்ளி ஆயத்துமுகம் ஆசிரியர் ஜெயசெல்வி, உதவியாளர் சத்யா, இல்லம்தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா, மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, ஒற்றுமை வளர்ப்போம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், கேக் வெட்டி நினைவு பரிசுகள் வழங்கி கொண்டாடினர்.

The post மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: