ரயில்வே கேட்டை மூட முடியாததால் ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டிநின்றன. இதுகுறித்து காஞ்சிபுரம் ரயில்நிலைய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழி யர்கள் ரயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காலை 8.15 மணிக்கு ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய திருமால்பூர்சென்னை கடற்கரை ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 9.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ரயில்வே கேட் சரிசெய்யப்பட்டு பிறகு ரயில்புறப்பட்டு சென்றது.
இதனால் காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்தூர் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. இந்த சம்பவத்தால் ஏனாத்தூர் ரயில்வே கேட் பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்து தொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவர் மீது காஞ்சிபுரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தாமதமானதால் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்றவர்களில் பலர் பலர் பாதியிலேயே வீடு திரும்பினர். சிலர் ரயில் கவுன்டரில் டிக்கெட்டை கொடுத்து பணத்தை வாங்கி கொண்டு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post ஏனாத்தூர் ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் தீப்பொறி 1 மணி நேரம் ரயில் தாமதம்; பயணிகள் அவதி appeared first on Dinakaran.